கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டம் வரும் மார்ச் 3-ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.
கோவை : கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டம் வரும் மார்ச் 3-ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பின்பற்றும் 'சைக்கிள் ஷேரிங்' எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகம் செய்ய கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, ஜி.பி.எஸ். உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட சைக்கிள்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சைக்கிளை வாடகைக்குப் பெற விரும்புவோர் தங்களது பெயர், விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு ஸ்மார்ட் அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட் அட்டையைக் கொண்டு அருகிலுள்ள சைக்கிள் நிலையத்திலிருந்து தாங்களாகவே சைக்கிளை எடுத்துக்கொள்ளவும், மாநகரிலுள்ள எந்த நிலையத்திலும் நிறுத்திவிட்டுச் செல்லவும் முடியும்.
இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின்கீழ், கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை வரும் மார்ச் 3-ம் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்கான டெண்டரை ஓஃபோ என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கோவை மாநகராட்சியின் சார்பில் 3-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சியானது, ஆர்.எஸ். புரத்தில் உள்ள எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன், மாநகராட்சி நிர்வாக ஆணையர் ஜி. பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.