அரசு அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியார் அணை வழியாக கேரளாவுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விட பட்டுள்ளது. கேரளாவின் மிரட்டலுக்கு அஞ்சி திறந்து விடப்பட்ட தண்ணீரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் அனைத்துக் கட்சி கூட்டமைப்பின் ஈடுபட்டனர். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரளாவிற்கு திறந்துவிட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட சென்றனர், அப்போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கே பாசன தண்ணீர் இல்லாத நிலையில் கேரளாவில் சில கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு அஞ்சி கோவை மாவட்ட ஆளுக்கட்சி அமைச்சரின் வாய்மொழி உத்தரவு படி கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும் என்றும், உடனடியாக கேரளாவிற்கு செல்லும் தண்ணீரை நிறுத்தாவிட்டால் எல்லைகளை மூடும் போராட்டத்தில் நடத்தப்படும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...