ஆக்கிரமைப்புகளை அகற்றிய நீலகிரி நகராட்சி நிர்வாகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் சாலையோர வியாபார நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் சாலையோர வியாபார நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பிற மாநிலத்திலுள்ள சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். பெரும்பாலும் சுற்றுலா தளங்களை காண வரும் இவர்களின் வாகனங்களுக்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

உதகை நகரமான மார்கெட் பகுதியில் சுற்றுலா பயணிகள் பொருட்கள் வாங்க அதிக அளவில் வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் அவர்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

மார்கெட் பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்கள் தங்கள் கடைகளுக்கு முன்னால் பிரதான சாலையை ஒட்டி உள்ள இடங்களை ஆக்கிரமைத்து கொள்வதால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் போவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று சாலையின் மார்கெட் பகுதியில் சாலையோர வியாபார நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடங்களை நகராட்சி நிர்வாகம் ஜெ.சி.பி இயந்திரத்தை கொண்டு இடித்து அகற்றியது.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...