கோனியம்மன் கோவில் தேரோட்டம்: கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெறுவதையொட்டி கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெறுவதையொட்டி கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவையின் புகழ் பெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று மதியம் 2:00 மணி முதல் நடைபெறுகிறது. இதையடுத்து மதியம் 12:00 முதல் இரவு, 8:00 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:- 

  • அவினாசி சாலையில் இருந்து பழைய மேம்பாலம் வழியாக வரும் கனரக வாகனங்கள், ஜே.எம்., பேக்கரி சந்திப்பிலிருந்து இடது பக்கம் திரும்பி ரயில்வே ஸ்டேஷன் வழியாக அல்லது அரசு கலை கல்லுாரி சாலை வழியாக கிளாசிக் டவர் சென்று வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
  • அவினாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து உக்கடம் செல்லும் இலகுரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள், மரக்கடை, என்.எச்., ரோடு, டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.
  • பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையிலிருந்து வரும் வாகனங்கள் உக்கடம் அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அடைந்து வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம் அல்லது பேரூர் பைபாஸ் சாலை வழியாக செல்லலாம்.
  • மேட்டுப்பாளையம் சாலை, சுக்கரவார்பேட்டை, பூமார்க்கெட் மற்றும் புரூக்பாண்ட் சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பழைய மேம்பாலம் வழியாக மரக்கடை, என்.எச்.,சாலை அடைந்து உக்கடம் செல்லலாம்.பொள்ளாச்சி சாலையிலிருந்து திருச்சி மற்றும் காந்திபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் பைபாஸ் சாலை வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் அடைந்து வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம். 
  • தடாகம் சாலையிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் சாலை வழியாக உக்கடம் செல்லலாம்.பேரூர் சாலையில் வரும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், தடாகம் சாலை வழியாக காந்திபார்க் அடைந்து வேண்டிய இடங்களுக்குச் சென்று கொள்ளலாம்.
  • லாரி போக்குவரத்து காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை நகருக்குள் தடை செய்யப்பட்டுள்ளது.
  • இதேபோன்று தேர் வரும் சாலையிலுள்ள ராஜவீதி, வைசியாள் வீதி, ஆர்.ஜி., வீதி, ஒப்பணக்காரவீதி, கே.ஜி., வீதி போன்ற பகுதிகளில் அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை தேர்வரும் சாலையில் நிறுத்தாமல் மாற்று இடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.
  • இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...