திருமுருகன்பூண்டி கோவிலில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா

திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி கோயிலில் நடைபெற்ற பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டி கோயிலில் நடைபெற்ற பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நேற்று இரவு நடைபெற்றது.

இதையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 5 வாகனங்களில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், அம்பாள், ஆகிய பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

பஞ்சமூர்த்திகள் சன்னதி வீதி, மேற்கு ரதவீதி மற்றும் வடக்கு ரதவீதி வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (புதன்கிழமை) சாமி திருக்கல்யாணம் மற்றும் யானை வாகன, அன்ன வாகன காட்சிகளும் நடைபெறுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...