யானை தாக்கி பண்ணைத் தொழிலாளி படுகாயம்: ரூ.1௦ ஆயிரம் நிவாரணம் வழங்கினார் வனப்பாதுகாவலர்

கோவை அருகே காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த பண்ணைத் தொழிலாளிக்கு வனப்பாதுகாபாளர் பழனிராஜா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

கோவை: கோவை அருகே காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த பண்ணைத் தொழிலாளிக்கு வனப்பாதுகாபாளர் பழனிராஜா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

பெரிய நாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவர் அப்பகுதியில் உள்ள பண்ணையில் பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அதைப் பார்த்தது அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், அவரைத் துரத்திய காட்டு யானை துதிக் கையால் தாக்கியதில் படுகாயமடைந்தார். 



தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று கோவை அரசு மருத்துவமனையில் அவரைச் சந்தித்த பெரியநாயக்கன்பாளையம் சரக வனப் பாதுகாப்பாளர் பழனிராஜா, அவருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத்தை வழங்கினார்.

இதனிடையே, பண்ணையின் உரிமையாளர் பாதுகாப்பான முறையில் பண்ணையை பராமரிக்கவில்லை என்றும் யானை தாக்கிய தொழிலாளிக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...