நீலகிரியில் குவிகிறது பிளாஸ்டிக் கழிவுகள்

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக குவிந்துள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக குவிந்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் புகழ் பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் தேர்த்திருவிழா நேற்று நிறைவு பெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான கேரள, கர்நாடகா-வில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். 

பொக்காபுரம் மாரியம்மன் தேர்த்திருவிழா நிறைவு பெற்ற நிலையில், திருவிழா நடைபெற்ற பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை வனப் பகுதிக்கு அருகாமையில் விட்டுச் சென்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.



நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட மாவட்டம் என்பதும் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் வனப் பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...