சிரியாவில் நடைபெற்று வரும் போரினால் குழந்தைகளும் பெண்களும் உயிரிழந்து வருவதால் உடனடியாக அங்கு நடைபெறும் தாக்குதலை தடுக்க வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: சிரியாவில் நடைபெற்று வரும் போரினால் குழந்தைகளும் பெண்களும் உயிரிழந்து வருவதால் உடனடியாக அங்கு நடைபெறும் தாக்குதலை தடுக்க வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிரியாவின் கிழக்கு கூட்டாவில் சண்டை நிறுத்தத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்த பிறகும் அங்கு இரண்டாவது நாளாக தொடர்ந்து வான் தாக்குதல்கள் தீவிரமாக நடத்தப்பட்டன. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதுவரை இறந்தவர்களில் 60 சதவிகிதம் பேர் குழந்தைகள். இந்த பாதிப்பை தடுக்க தாக்குதலை தடுக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிரியா அரசு போரை நிறுத்த கொள்ள வேண்டியும் கோவை நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிரியா அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.