யானை தாக்கி பண்ணைத் தொழிலாளி படுகாயம்

கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் பண்ணைத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவை: கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் பண்ணைத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

பெரிய நாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அப்பகுதியில் உள்ள பண்ணையில் பணி புரிந்து வந்தார். நேற்று இரவு அப்பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அதைப் பார்த்தது அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், அவரை துரத்திய காட்டு யானை துதிக் கையால் தாக்கியதில் படுகாயமடைந்தார். 

தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, பண்ணையின் உரிமையாளர் பாதுகாப்பான முறையில் பண்ணையை பராமரிக்கவில்லை என்றும் யானை தாக்கிய தொழிலாளிக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...