சிகிச்சைக்கு அதிக பணம் கேட்டு மிரட்டுவதாக தனியார் மருத்துவமனை மீது புகார்

கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அதிக பணம் கேட்டு மிரட்டுவதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஜான் என்ற மகன் உள்ளார்.

கோவை: கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அதிக பணம் கேட்டு மிரட்டுவதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஜான் என்ற மகன் உள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அன்று செட்டிபாளையம் சாலையில் நடந்து சென்ற சேசுராஜ் மீது காந்திபுரத்தில் இருந்து வெள்ளலூர் செல்லும் அரசு பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலன் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அங்கு இரண்டு மணி நேரம் தாமதமாக சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. 

தொடர்ந்து அவர் திருச்சி சாலையிலுள்ள ரிச்மண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துள்ளனர்.

ரிச்மண்ட் மருத்துவமனை நிர்வாகத்தினர் திங்கள் கிழமை இரவு உறவினர்களிடம் அனுமதி வாங்காமல் சேசுராஜீக்கு கையில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து செவ்வாய்கிழமை காலையில் உறவினர்கள் சேசுராஜை பார்த்துள்ளனர். அப்போது அவர் சத்தம் போட்டுள்ளார். மருத்துவமனையில் பணியில் இருந்தவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை அளித்துள்ளனர்.மூச்சு வராததால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து புதன் கிழமை காலை மூச்சு விட திணறுவதாகவும், நுரையீரலுக்கு கீழே இடுப்பில் குழாய் போட்டால் சரியாகிவிடும் என மருத்துவமனையில் சார்பில் கூறியுள்ளனர். மேலும், மூளையில் ரத்தம் உறைந்து இருப்பதாகவும், அதற்கு மருந்து கொடுத்தால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளனர். 

ஒவ்வொரு பாகமும் பாதிக்கப்படுவதாகக் கூறி உண்மையை மறைத்து கடந்த ஏழு நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பந்தய சாலையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து சேசுராஜை பார்த்து விட்டு அவரை இந்த மருத்துவமனையில் இருந்து மற்ற மருத்துவமனைக்கு மாற்றினால் உயிருக்கு ஒரு சதவிகிதம் கூட உத்திரவாதம் இல்லை எனக்கூறியுள்ளனர். இதனையடுத்து அவரது உறவினர்களிடம் ரிச்மண்ட் நிர்வாகம் ஒரு லட்சத்து ஏழுபதாயிரம் ரூபாய் பணம் கட்டி வேறு மருத்துவமனைக்கு சேசுராஜை மாற்றச்சொல்லி வற்புறுத்துகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகம் பொய்யான தகவலை சொல்லி அலைக்கழித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியதால் பந்தய சாலை காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அவரது உறவினர்கள் சேசுராஜை பார்க்க வேண்டும் எனக்கூறியதால் அழைத்துசென்றனர்.

தற்போது அவர் உயிர் இருக்கிறதா இல்லையா எனத்தெரியாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும், காவல் துறையை வைத்து மிரட்டுவதாகவும் புகார் கூறினர்.



ஏற்கனவே 1, 75,000 ரூபாய் பணம் கட்டியும் , மீண்டும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், ஆதார் கார்டு உட்பட அனைத்து அசல் சான்றிதழ்களையும் வாங்கி வைத்துக்கொண்டு அரசு காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க மருத்துவமனை நிர்வாகம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...