பொதுமக்கள் மற்றும் ரயில் தொன்மை ஆர்வலர்களிடம் இருந்து பழமை வாய்ந்த ரயில்வே புகைப்படங்களை வரவேற்பதாகத் தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
கோவை: பொதுமக்கள் மற்றும் ரயில் தொன்மை ஆர்வலர்களிடம் இருந்து பழமை வாய்ந்த ரயில்வே புகைப்படங்களை வரவேற்பதாகத் தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
சேலம் கோட்டத்தின் நீலகிரி மலை ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில்நிலையங்கள் மற்றும் தடங்கள், சிக்னல்கள், போன்ற ரயில்வே அமைப்புகள் பற்றிய தொன்மையான புகைப்படங்களை மேட்டுப்பாளையம் ரயில் அருங்காட்சியகத்திலும் நீலகிரி மலை ரயில் பெட்டிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் ரயில் தொன்மை ஆர்வலர்கள் தங்களிடம் புகைப்படம் இருந்தால் அவற்றை சேலம் கோட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு தென்னக ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் தென்னக ரயில்வே சர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதி எடுத்த பின் அவை மீண்டும் உரியவர் கையில் திருப்பித் தரப்படுவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் மேட்டுப்பாளையம் ரயில் அருங்காட்சியகத்திலும் நீலகிரி மலை ரயில் பெட்டிகளிலும் வழங்கியவர் பெயர் குறிப்பிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். எனவே, அத்தகு புகைப்படங்கள் வைத்திருப்போர், அவற்றை வழங்கி ரயில்வே நிர்வாகத்திற்கு உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என கூறப்பட்டுள்ளது.