கோவையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களை சீரமைப்பதற்காக, அரசின் நிதியுதவி கோருவதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (பிப்.,28) கடைசிநாளாகும்.
கோவை: கோவையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களை சீரமைப்பதற்காக, அரசின் நிதியுதவி கோருவதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (பிப்.,28) கடைசிநாளாகும்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களில் பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. மேலும் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள்: கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் அளிக்க வேண்டும்.
சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்தை பிற்சேர்க்கை-III-ல் உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு நாளை மறுநாளுக்குள் (பிப்.,28) விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரி றறற.டிஉஅடிஉஅற@வn.பழஎ.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அவ்விண்ணப்பங்களை பரிசீலித்து, கிறிஸ்துவ தேவாலயங்களில் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளும் கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.