பயனற்று கிடக்கும் காரணம்பேட்டை பேருந்து நிலையம்

பயனற்ற நிலையில் உள்ள காரணம்பேட்டை பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: பயனற்ற நிலையில் உள்ள காரணம்பேட்டை பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட எல்லை பகுதியான சூலூருக்கு அருகே காரணம்பேட்டை கிராமம் உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட இந்த காரணம்பேட்டை கிராமம் கோடாங்கிப்பாளையம் பஞ்சாயத்திற்கு கீழ் செயல்பட்டு வருகிறது. பருவை, ஆராக்குளம், கோம்பக்காடு போன்ற கிராம மக்களின் முக்கிய வழித் தடமாக இந்த ஊர் உள்ளது.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காரணம்பேட்டை கிராமம் அமைந்துள்ளதால் மதுரை, கரூர், திருப்பூர், கோவை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் இப்பகுதியை கடந்து தான் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனை தடுக்கும் வகையிலும் பொதுமக்கள் பயன் பெறும் வகையிலும் கடந்த 2015-ம் ஆண்டு சுமார் ரூ.1 கோடியே 78 லட்சம் மதிப்பில் சகல வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

இந்த பேருந்து நிலையத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2015-ம் ஆண்டு காணொளி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஆனால் அந்த பேருந்து நிலையம் இன்று வரை பயன்பாட்டுக்கு வரவேவில்லை.



திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லக்கூடிய பேருந்துகள் இந்த பேருந்து நிலையத்திற்கு உள்ளே வருவதில்லை. பழைய பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்தப்படுகிறது.

காரணம்பேட்டை அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் சொற்ப அளவிலேயே புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதிகம் பேருந்துகள் வராததால் பொதுமக்களும் பழைய பேருந்து நிறுத்தத்தையே உபயோகிக்கத் தொடங்கி விட்டனர்.



இது குறித்து சமூக ஆர்வலர் முத்தையா கூறுகையில் "யாரும் எதிர்பாராத வகையில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ஆனால், இந்த பேருந்து நிலையம் அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது பயன்பாடில்லாமல் காணப்படுகிறது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக தற்போது இந்த பேருந்து நிலையம் மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பயணிகள் மீண்டும் நெடுஞ்சாலை அருகே உள்ள நிழற்குடை கூட இல்லாத பழைய பேருந்து நிறுத்தத்தையே பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

தற்போது, அந்த புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை, இருக்கைகள், விளக்குகள் ஆகியவை சிதிலமடைந்து வருகின்றன. பேருந்து நிலையம் மூடு விழாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "காரணம்பேட்டை பேருந்து நிலையம் பயன்பாட்டில் தான் உள்ளது. நெடுஞ்சாலை வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் உள்ளதால் பேருந்து நிலையத்தில் சமூக விரோதிகள் தொல்லை இல்லை." என்றார்.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை முறையாக பாரமரித்து ,பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...