ஜெ., 70-வது பிறந்த நாள் விழா : கோவையில் அ.தி.மு.க., தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று அ.தி.மு.க., தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று அ.தி.மு.க., தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். 



மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்க இருக்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.



இந்த நிலையில், கோவை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன்.அர்ஜுனன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து அண்ணா சிலை பகுதிக்கு ஊர்வலமாக சென்ற அ.தி.மு.க.,வினர் அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா, திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி அங்கிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 



மேலும், இன்று மதியம் கோனியம்மன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சியும், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன. 



இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க.,பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...