ஆட்சியை தொட்டு கூட பார்க்க முடியாது : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்

தங்களது ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது என ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தங்களது ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது என ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவ சிலை திறக்கப்பட்டது. அப்போது, நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஜெயலலிதா இயக்கத்தை கட்டிக்காத்து நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார். எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு பிரிந்திருந்த அதிமுகவை ஒன்றிணைத்தார் ஜெயலலிதா. இந்தியாவிலேயே ஒரு கட்டுப்பாட்டோடு உள்ள இயக்கம் அ.தி.மு.க., என்பதை ஜெயலலிதா நிரூபித்தார். இந்தியாவிலேயே கட்டுக்கோப்பாக கட்சியை வழி நடத்திய ஒரே தலைவர் ஜெயலலிதா தான். 

ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பயணித்து கொண்டிருக்கிறோம்.  எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது. எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:- இந்த அ.தி.மு.க., ஆட்சியை நடத்துவது ஜெயலலிதா. கட்சியை நடத்துவது தொண்டர்கள். அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும். ஒரு விரல் எம்.ஜி.ஆர்., மறு விரல் ஜெயலலிதா என வாழ்ந்து வருகிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

மக்களை நாங்கள் காப்பாற்ற போகிறோம் என்பவர்கள் பேச்சு விரைவில் புஸ்வாணமாகிவிடும். மக்களை காப்பாற்றும் ரட்சகர்கள் போல் ஒருசிலர் வீர வசனம் பேசுகிறார்கள். ஜெயலலிதா இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். அ.தி.மு.க.,வை வெல்ல நினைத்த கட்சிகள் எல்லாம் காற்றில்லாத பலூன்களாக சுருங்கிக் கிடக்கின்றன. அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் புதிது புதிதாக பறக்கத் தொடங்கியுள்ளன.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...