நீலகிரி மலை ரயிலை நிலக்கரி மூலம் இயக்க முடிவு

யுனஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி: யுனஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வரு வருகிறது. இதில் பயணிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வரும் இந்த மலை ரயில் ஆரம்ப கட்டத்தில் நிலக்கரியினை எரித்து அதன் மூலம் உருவாகும் நீராவியின் உந்து சக்தியில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. 



ஆனால் நிலக்கரி மூலம் இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்தி விட்டு பர்னஸ் ஆயிலை பயன்படுத்தி தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை இயக்க ஆறு எஞ்சின்கள் உள்ள நிலையில் இதில் ஒன்று மட்டுமே நிலக்கரி மூலம் இயங்கும் என்ஜினாக இருந்து வந்தது. இதுவும் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது, அந்த எஞ்சின் மலை ரயிலின் பழமையை பறைசாற்றும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 



இந்த நிலையில், மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தது. தொடர்ந்து, நிலக்கரி என்ஜின் மேட்டுப்பாளையம் ரயில் நிலைய பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு பழுது பார்க்கப்பட்டது. சுமார் பத்தாண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த என்ஜின் மீண்டும் இயங்கும் வகையில் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் இம்மலை ரயிலின் பெட்டிகள் 1931-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டவையாகும். மலை ரயிலை மீண்டும் அதன் பாரம்பரிய முறைப்படி நிலக்கரியில் இயக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக இதன் பெட்டிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் ரயில் பெட்டிகளை நிலக்கரி என்ஜின் இழுத்துச் செல்ல ஏதுவாக இதன் இரும்பு இருக்கைகள் அகற்றப்பட்டு மர இருக்கைகள் பொருத்தப்பட்டு பெட்டிகளின் எடை குறைக்கப்பட்டுள்ளது. 

பத்தாண்டுகளுக்குப் பின்னர் மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பது நீலகிரி மாவட்ட மக்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...