காதலர் தினப் பரிசாக கணவருக்கு கல்லீரல் தானம் செய்த மனைவி

கோவை மாவட்டத்தில், காதலர் தினப் பரிசாக பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில், காதலர் தினப் பரிசாக பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 



பெரம்பலூரைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (36) மற்றும் அவரது மனைவி நிஷா (34). கல்லீரல் செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த ஜாகீர் உசேன், மாற்று கல்லீரல் சிகிச்சைக்காக கடந்த 13-ம் தேதி கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சேர்ந்தார். அவருடைய மனைவி நிஷா, தனது கணவருக்காக கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து, இன்று நடைபெற்ற அறுவை சிகிச்சையில், நிஷாவின் கல்லீரல், ஜாகீர் உசேனுக்கு மாற்றி வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. 



இது தொடர்பாக பேசிய ஜெம் மருத்துவமனையின் மருத்துவர் பழனிவேலு கூறுகையில், "பிரான்சில் முதல்முறையாக கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதைத் தொடந்து, கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்த சிகிச்சை பிரபலமானது. இந்த நிலையில், இந்தியாவில், முதல்முறையாகக் கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது," என்றார். 

காதலர் தினத்தையொட்டி, ஒவ்வொருவரும் விலைமதிப்பு மிக்க பொருட்களை வழங்கி தங்களது காதலை வெளிப்படுத்தி வரும் நிலையில், பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...