மீண்டும் அவினாசியில் பணியமர்த்தப்பட்ட டி.எஸ்.பி.க்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

திருப்பூர் மாவட்டத்தில் பணிமாற்றம் பெற்று மீண்டும் அவினாசிக்கே வந்துள்ள டி.எஸ்.பி.,யை பணிமாற்றம் செய்ய வேண்டும் என்றும், அதுவரை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அவினாசி அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பணிமாற்றம் பெற்று மீண்டும் அவினாசிக்கே வந்துள்ள டி.எஸ்.பி.,யை பணிமாற்றம் செய்ய வேண்டும் என்றும், அதுவரை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அவினாசி அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



சபாநாயகர் தனபாலின் ஆதரவோடு அவினாசி டி.எஸ்.பி., பரமசாமி பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி, உடனடியாக அவரை பணியிடமாற்றம் செய்யவேண்டும் எனவும், அதுவரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாகவும் இன்று அவினாசியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், இ.கம்யூ., மா.கம்யூ, பா.ம.க., வி.சி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

சட்ட விரோத மதுவிற்பனை, லாட்டரி விற்பனை, சட்ட விரோத மனமகிழ் மன்றங்கள், சிவில் வழக்குகளில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்வது, வழக்குப் பதியாமல் இழுத்தடிப்பது, புகார்தாரரை மிரட்டுவது, சேவல் சண்டை அனுமதி, வாகனத் தணிக்கை என்கிற பெயரில் அராஜகமாக பணம் வசூல் செய்வது, ஆளும்கட்சி தவிர பிற கட்சி பேனர்கள் வைக்க தடைசெய்வது என அடுக்கடுக்கான சட்ட விரோத செயல்களுக்கு துணைப் போவதாக அவினாசி டி.எஸ்.பி., பரமசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. 

இதுமாதிரியான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அடுத்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சேலம் மாவட்ட குற்றப்பிரிவிற்கு பணி இடம் மாற்றப்பட்ட அவினாசி டி.எஸ்.பி.,யை பணியில் சேர்ந்த ஒரே நாளில் மீண்டும் அவினாசிக்கே கடந்த 17-ம் தேதி மாற்றப்பட்டார். இச்சம்பவம் அவினாசி பகுதி மக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இது குறித்து அவினாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் தனபால் ஆதரவோடு அவினாசி டி.எஸ்.பி. பரமசாமி அவினாசி பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும், எனவே, சபாநாயகர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு டி.எஸ்.பி., பரமசாமியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும், நடவடிக்கை எடுக்காவிட்டால், கண்டனப் பொது கூட்டம், கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் என பணியிட மாற்றம் செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...