வனங்களில் தனியாக நடமாடும் யானைகளை கண்டறிவதற்கான பயிற்சி

கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனச்சரகத்தில் தனியாக நடமாடும் காட்டு யானைகளை அடையாளம் கண்டறியும் முறை குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு பயற்சி அளிக்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனச்சரகத்தில் தனியாக நடமாடும் காட்டு யானைகளை அடையாளம் கண்டறியும் முறை குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு பயற்சி அளிக்கப்பட்டது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளின் வனச்சரகங்களில் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் என 70-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உலகளாவிய இயற்கைக்கான நிதியம் சார்பில் [WWF] யானைகளின் நடமாட்டத்தையும், அதன் எண்ணிக்கை மற்றும் இயல்புகள் குறித்து துல்லியமாக கண்டறிதல் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 

மேலும், தொடர்ந்து இடம் மாறியபடி சுற்றி வரும் யானைகளை சரியாக கணக்கிடுவது எப்படி, வேளாண் பயிர்களை உண்டு பழகியதன் காரணமாகவே மீண்டும் மீண்டும் விளைநிலங்களை நோக்கிப் படையெடுக்கும் யானைகளைக் கண்டறிதல் போன்ற பயிற்சிகளும் வனத்துறையினருக்கு அளிக்கப்பட்டது. மேலும், வனங்களில் தனியாக நடமாடும் யானைகளை, காதுகளின் வித்தியாசம், வெள்ளை படலம், கட்டிகள், புண், வடுக்கள் மற்றும் வால் ஆகியவற்றை வைத்து வகைப்படுத்துவது குறித்தும் விளக்கப்பட்டது. 

இது தொடர்பாக உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தைச் சேர்ந்த பூமிநாதன் பேசுகையில், ஆண் யானைகளை அடையாளப்படுத்துவது கடினமான பணியல்ல. அதன் தந்தங்களை வைத்து எளிதாக வகைப்படுத்த முடியும். ஒவ்வொரு யானைகளுக்கும் தந்தங்கள் வேறுபடும். பெண் யானைகளை அடையாளம் காண்பது சற்று கடினம். ஏனெனில், அவற்றிற்கு தந்தங்கள் கிடையாது. என்றார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...