சமுதாய வளைகாப்பு விழா : தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கர்ப்பிணி பெண்கள்

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பயன்பெற்ற கர்ப்பிணி தாய்மார்கள் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

கோவை : கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பயன்பெற்ற கர்ப்பிணி தாய்மார்கள் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.



பொருளாதார வசதியற்ற ஏழை காப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா திட்டத்தை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதனடிப்படையில், ஏழை எளிய கர்ப்பிணி தாய்மார்களை மகிழ்விக்கும் விதமாக தமிழக அரசின் சார்பில் வருடந்தோறும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு தாயாகவும், தந்தையாகவும், இருந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு பெற்றோர்கள் செய்யக்கூடிய தாய் வீட்டு சீதனமான வளைகாப்பு விழாவினை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டமானது கோவை மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய கர்ப்பிணி தாய்மார்கள் தேர்வு செய்யப்பட்டு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாலை, சந்தனம், குங்குமம், வளையல் ஆகிய பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தாம்பூலம் வழங்கப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு பொங்கல்சாதம், புளிசாதம், லெமன்சாதம், சாம்பார்சாதம், தயிர்சாதம், ஆகிய ஐந்து வகை சாதங்கள் வழங்கப்பட்டது. மேலும்,கருவுற்று இருக்கும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடும் வழங்கப்பட்டு வருகிறது.

சமுதாய வளைகாப்பின் விழாவின் மூலம் பயன்பெற்ற பயனாளி மஞ்சு கூறுகையில்,  நான் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள திலகர் வீதியில் வசித்து வருகிறேன். எனது தந்தை ஒரு விவசாயி எனக்கு இரண்டு தங்கைகள் உள்ளன. நான் முதல் பெண் என்பதால் எனக்கு திருமணம் செய்து வைப்பது எனது பெற்றோர்களுக்கு சுமையாக இருந்து வந்த சூழ்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் எனக்கு திருமணம் நடைபெற்றது. அதன்பின் ஏழு மாதம் கர்ப்பிணியான எனக்கு பெற்றோர் வீட்டில் முறைப்படி நடைபெற வேண்டிய வளைகாப்பு நடத்திட முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டேன். பெற்றோர் வீட்டில் செய்வதைவிட வெகுவிமர்ச்சையாக வளைகாப்பு நடைபெற்றது. இத்திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். என்றார். 

 

மற்றொரு பயனாளி சுமதி கூறுகையில், நான் கிணத்துக்கடவில் வசித்து வருகிறேன். என் கணவர் பெயர் நாகராஜன், அவர் கூலி வேலை செய்து வருகிறார். நான் இப்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளேன். எனது குடும்ப வறுமை நிலையில் உள்ளதால், என்னை போன்ற பெண்களுக்கு வளைகாப்பு விழா ஒரு கனவாகவே இருந்தது. தாய் உள்ளத்துடன் சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டேன். இவ்விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்து வகையான சாதங்கள், தாம்பூலம், போன்ற சீர்வரிசைகள், கர்ப்பகால பராமரிப்பு, பாதுகாப்பான பிரசவம் குழந்தை பராமரிப்பு குழந்தைகளுக்கு எடை எடுத்தலின் முக்கியம், இணை உணவின் அவசியம் பற்றிய அறிவுரைகளும் வழங்கினார்கள்.. இவ்வாறு கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...