சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

அரசு அலுவலகங்களின் சுவர்களில் சட்டவிரோதமாக விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை : அரசு அலுவலகங்களின் சுவர்களில் சட்டவிரோதமாக விளம்பர சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக அரசு அலுவலகங்களில் தனியார்களின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்படுவது காணப்படுகின்றது. அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவர்களிலோ, அரசு அலுவலகங்களின் கட்டிடங்கள் மீதோ, அரசு அலுவலக வளாகங்களிலோ தனியார்கள் சுவரொட்டிகள் ஒட்டுவதோ, சுவற்றில் எழுதுவதோ, விளம்பரப் பலகைகள் வைப்பதோ சட்டத்திற்கு புறம்பான செயல்களாகும். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இனிவரும் காலங்களில், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனவர்கள் மீது தமிழ்நாடு ஓபன் பிளேஸின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...