கோவையில் சர்வதேச தொழில் முனைவு அமைப்பின் (TiE) சார்பில் ஸ்டார்ப்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டுக்கான திருவிழாவை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி துவக்கி வைத்தார்.
கோவை: கோவையில் சர்வதேச தொழில் முனைவு அமைப்பின் (TiE) சார்பில் ஸ்டார்ப்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டுக்கான திருவிழாவை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி துவக்கி வைத்தார்.
சர்வதேச தொழில் முனைவு அமைப்பின் (TiE) சார்பில் ஸ்டார்ப்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டுக்கான திருவிழா வரும் மார்ச் 24 ஆம் நடை பெற இருக்கிறது. தொழில் துவங்குபவர்களுக்கும், தொழிலை விரிவு செய்பவர்களுக்கும் டை அமைப்பு உலக அளவில் உதவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்டார்ப்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டுக்கான திருவிழாவை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், டை அமைப்பின் தலைவர் ஜி.கார்த்திகேயன் கூறுகையில்,“ டை கோவை அமைப்பு நடத்தும் இந்த நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும், வியாபார யுக்திகளிலும் முதலீடு செய்ய பி.எஸ்.ஜி. ஸ்டெப், என்.ஏ.என்., கொங்கு டி.பி.என்., சென்னை ஏஞ்ச்ல்ஸ் ஆகிய அமைப்புகள் உள்ளனர். இந்த நிறுவனங்களில் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 3 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தொழில் துவங்கி அடுத்தகட்டத்திற்கு எடுத்த செல்ல முதலீடு தேவைப்படுவோருக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும். முதலீடு இருந்தால் தான் ஒரு தொழில் தொடங்க முடியும் என்கிற நிலை மாறி நல்ல வியாபாரங்களில் முதலீடு செய்ய சென்னை ஏஞ்ச்ல்ஸ் போன்ற அமைப்புக்கள் முதலீட்டாளர்களுடன் தயாராக உள்ளனர். சில தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட வியாபாரங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க முன் வருவதில்லை. எல்லா முயற்சிகளுக்கும், மேம்படுத்தலுக்கும் விரிவாக்கம் செய்வதற்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் முதலீடு தேவை.
தமிழகம் நாட்டின் முதல்நிலை ஸ்டார்ட் அப் மாநிலமாக வர வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 3 கோடி வரை ஏஞ்சல் முதலீட்டுக்கு விண்ணப்பம் செய்யலாம். செம்மைப்படுத்தப்பட்ட ஐடியா நிலையில் இருக்கும் முயற்சிகள் முதல் ஓரளவு சந்தையில் காலூன்றிய நிறுவனங்கள் வரை வரவேற்கப்படுகிறார்கள்,“ இவ்வாறு கூறினார்.
தொழில் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க டை அமைப்பின் இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 10 ஆம் தேதியாகும். முகவரி [email protected] அலைப்பேசி எண் :- 9840482069 / 6380337673