அதிநவீன சி.டி. ஸ்கேன் வசதி கோவை அரசு மருத்துவமனையில் திறப்பு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றரை கோடி மதிப்பில் புதிய சி.டி. ஸ்கேன் வசதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒன்றரை கோடி மதிப்பில் புதிய சி.டி. ஸ்கேன் வசதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை ஒரு சி.டி. ஸ்கேன் மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில், புதியதாக சி.டி. ஸ்கேன் வாங்குவதற்காக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று புதியதாக சி.டி. ஸ்கேன் வசதியை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதிநவீன தற்போதைய புதிய தொழில் நுட்பங்களுடன் ஒன்றரை கோடி மதிப்பில் இந்த சி.டி. ஸ்கேன் நிறுவப்பட்டு உள்ளது. ஏற்கனவே, இருந்த பழைய சி.டி. ஸ்கேனும் புதியதாக மாற்றப்பட்டது.



இதனால், தற்போது அரசு மருத்துவமனையில் இரண்டு சி.டி. ஸ்கேன் உள்ளது. வழக்கமாக நூறு பேருக்கு ஸ்கேன் செய்யும் வசதி இருந்த நிலையில், தற்போது 200 பேருக்கு ஸ்கேன் வசதி செய்து தர முடியும் என மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...