திருப்பூரில் நாளை (பிப்.,18) நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இறுதிகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
திருப்பூர்: திருப்பூரில் நாளை (பிப்.,18) நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இறுதிகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அலகுமலையில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக, அப்பகுதியில் வாடிவாசல் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. மேலும், ஒரேநேரத்தில் சுமார் 8 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அமரக்கூடிய வகையில் இருக்கைகள் மற்றும் இருபுறமும் தடுப்பு வேலிகள், மருத்துவ முகாம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஏராளமான பரிசு பொருட்கள் குவிந்துள்ளன. இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்ட கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் விலங்குகள் நல அலுவலர் மிட்டல் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இதனிடையே, நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 720 மாடுகள் பங்கேற்றுள்ள இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி 9 சுற்றாக நடைபெறும் என்றும், மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு தமிழகத்தில் எங்கும் இதுவரை கொடுக்காத பரிசுகள் கொடுக்கப்படும் எனக் கூறினார்.
