கிணத்துக்கடவு அரசமரத்துப் பிரிவு பகுதியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: கிணத்துக்கடவு அரசமரத்துப் பிரிவு பகுதியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எப்போதும், பரபரப்பாக இருக்கும் இந்த நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியலால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.