திருப்பூர் மாவட்டத்தில் தபால் அலுவலகம் பாஸ்போர்ட் சேவா கேந்திர மையம் அமைக்க அனுமதி அளித்த மத்திய அரசுக்கு திருப்பூர் எம்.பி. சத்தியபாமா நன்றி தெரிவித்தார்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தபால் அலுவலகம் பாஸ்போர்ட் சேவா கேந்திர மையம் அமைக்க அனுமதி அளித்த மத்திய அரசுக்கு திருப்பூர் எம்.பி. சத்தியபாமா நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது தீவிர முயற்சியின் பலனாக திருப்பூரில் தபால் அலுவலகம்/பாஸ்போர்ட் சேவா கேந்திர மையம் அமைக்க மத்திய அமைச்சகம் ஒத்துக்கொண்டது என்பதை மனப்பூர்வமான மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு நெஞ்சார்ந்த நன்றி. எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, திருப்பூர் எம்.பி., சத்தியபாமாவுக்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த 1-ம் தேதி எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் புதிய அஞ்சலக கட்டடம் மற்றும் பாஸ்போர்ட் சேவை மையம் அமைப்பது தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி மக்களவையில் விதி எண் 337-இன் கீழ் சிறப்புக் கோரிக்கை விடுத்தீர்கள். இந்தக் கோரிக்கையில் தெரிவித்த அனைத்து கவலைகளையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்.
திருப்பூரில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
இந்த அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை அமைப்பதற்காக அஞ்சல் துறையுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் நெருக்கமாக தொடர்புகொண்டு பணியாற்றி வருகிறது. புதிய இடத்தில் கட்டடம் கட்டுவதை விடுத்து ஏற்கனவே செயல்பட்டு வரும் அஞ்சலகத்தில் இந்தச் சேவையையும் இணைப்பது குறித்து இரண்டு அமைச்சகங்களும் பரிசீலித்து வருகின்றன. இந்த அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப சாதனங்களும் வாங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் சாராத சாதனங்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளும் முழுமையடையும் நிலையில் உள்ளதால் விரைவில் திருப்பூரில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பாட்டுக்கு வரும். மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை உங்களது கவலைகளை போக்கும் என்று நம்புகிறோம். நன்றி. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.