நீலகிரி மாவட்டத்தில் காட்டெருமைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் பணியில் வனத்துறை, சர்வதேச வனவிலங்குகள் நிதியத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் காட்டெருமைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் பணியில் வனத்துறை, சர்வதேச வனவிலங்குகள் நிதியத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டியே உள்ளன. அதுவும் பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் வனங்களை ஒட்டியே காணப்படுகின்றன. இதனால், காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள் மற்றும் காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் தேயிலை தோட்டங்களுக்குள் வந்து விடுகின்றன. அங்குள்ள பயிர்களை இவைகள் நாசம் செய்வது மட்டுமின்றி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.
குறிப்பாக, உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி தாலுகாக்களில் காட்டெருமைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இவை தேயிலை தோட்டங்களுக்கு நடுவே வளர்ந்துள்ள களைச் செடிகளையும், புற்களையும் உட்கொள்ள ஆரம்பித்தால், சுமார் 2 மணிநேரம் முதல் 5 மணிநேரம் வரை அங்கேயே சுற்றி வருகின்றன. இதனால், அந்தத் தேயிலை தோட்டங்களுக்கு விவசாயிகளோ அல்லது கூலித் தொழிலாளிகளோ பணிக்கு செல்ல முடியவதில்லை. சில சமயங்களில் பசுந்தேயிலை பறிக்கக் கூட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை விரட்டுவதால், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சில நேரங்களில் காட்டெருமைகள் தாக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
கடந்தாண்டு மட்டும் மாவட்டத்தில் காட்டெருமை தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். காட்டெருமைகளுக்கு மிக அருகில் மனிதர்கள் செல்வதால் தான், அவை தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.காட்டெருமைகளின் தாக்குதலை தடுக்க அறிவியல்ரீதியாக ஆய்வு செய்து வருவதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.
வன அலுவலர் எஸ்.கலாநிதி கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் காட்டெருமைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால், கூட்டத்தில் வெளியேறும் விலங்குகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து விடுகின்றன. இதனால், ஏற்படும் மனித-விலங்கு மோதல்களைத் தவிர்க்க அறிவியல்ரீதியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, சர்தேச வனவிலங்குகள் நிதியத்துடன் இணைந்து வனத்துறை அறிவியல்ரீதியாக ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காட்டெருமைகளின் வழித்தடத்தில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றவும், பிரச்சினைக்குரிய விலங்குகளை இட மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, வனங்களில் உள்ள களைச்செடிகள் மற்றும் அந்நிய தாவரங்களான கற்பூரம், சீகை மரங்களை அகற்றி, புல்வெளிகளை அதிகரிக்கும் பணியில் ஈடுபடுகிறோம். என்றார்