நீலகிரியில் இறந்த குட்டி யானையை விட்டுப் பிரிய முடியாமல் தவிக்கும் பெண் யானை அந்தப் பகுதியிலேயே நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உருக வைக்கும் விதமாக இருந்தது.
நீலகிரி: நீலகிரியில் இறந்த குட்டி யானையை விட்டுப் பிரிய முடியாமல் தவிக்கும் பெண் யானை அந்தப் பகுதியிலேயே நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உருக வைக்கும் விதமாக இருந்தது.

மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் நெல்சன் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரேஞ்சர் காந்தன், வனவர் கணேசன் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, இரண்டு பெண் யானைகள் இறந்த குட்டி யானையின் அருகே நின்று கொண்டிருந்தது. மேலும், சற்று தொலைவில் ஆண் யானை ஒன்றும் நின்றிருந்தது.
இறந்த குட்டி யானையின் உடலை தாய் யானை தனது கால்களுக்கு நடுவே வைத்துக் கொண்டு யாரையும் நெருங்கவிடாமல் பாதுகாப்பாக அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதனால், இறந்த குட்டி யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் வனத்துறையினர் திணறினர்.