காவல் ஆய்வாளரைக் கண்டித்து பா.ஜ.க., சார்பில் காவல்நிலையம் முற்றுகைப் போராட்டம்

திருப்பூரில் கந்துவட்டிக்கு ஆதரவாக ஆய்வாளர் கட்டப்பஞ்சாயத்து செய்ததை கண்டித்து பா.ஜ.க., சார்பில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் கந்துவட்டிக்கு ஆதரவாக ஆய்வாளர் கட்டப்பஞ்சாயத்து செய்ததை கண்டித்து பா.ஜ.க., சார்பில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வேலம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருபவர் மருது. இவர், பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கோவையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரிடம் தொழில் வளர்ச்சிக்காக ரூ. 3.5 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். மேலும், கடந்த 20 மாதங்களாக வட்டியை ஒழுங்காக மருது செலுத்தி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜசேகரன் கொடுத்த தொகைக்கு மேல் கந்துவட்டியாக ரூ. 6 லட்சம் வரை கேட்டு மிரட்டியுள்ளார். இதனை தர மருது மறுப்பு தெரிவித்துள்ளார். 



இதையடுத்து, மருதுவிடம் இருந்து பணத்தை பெற்று தருமாறு வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகத்திடம் ராஜசேகர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், மருதுவை அழைத்த ஆய்வாளர் வலுக்கட்டாயமாக ரூ. 5 லட்சம் கொடுப்பதாக வற்புறுத்தி பத்திரத்தில் எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது. 



இந்த நிலையில், ஆய்வாளர் சண்முகம் கந்துவட்டிக்கு ஆதரவாக செயல்பட்டதைக் கண்டித்து பா.ஜ.க.,வினர் வேலம்பாளையம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, காவல்நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து துணை ஆணையர் ராமகிருஷ்ணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

கந்து வட்டிக்கு எதிராக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், திருப்பூரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் ஆய்வாளர் ஒருவரே கந்துவட்டிக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...