தாராபுரம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 15 ஆடுகள் பலி

தாராபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் வெங்கிடம்மாள் என்ற மூதாட்டி வளர்த்து வந்த 15 ஆடுகள் பலியாகியது.

திருப்பூர்: தாராபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் வெங்கிடம்மாள் என்ற மூதாட்டி வளர்த்து வந்த 15 ஆடுகள் பலியாகியது.

கோவில்பாளையம் நடுத்தோட்டத்தை சேர்ந்த மூதாட்டி வெங்கிடம்மாள். கணவரை இழந்து தனியாக வசித்துவரும் இவர் 30 ஆடுகளும் 5 மாடுகளும் வளர்த்து வருகிறார். தற்போது மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் காய்ந்து போயிருப்பதால் வெங்கிடம்மாள் தனது கால்நடைகளுக்குத் தீவனமாக கழிவு பஞ்சுகளை கிலோ 15 ரூபாய் விலைகொடுத்து வாங்கி ஆடு, மாடுகளை சிரமப்பட்டு வளர்த்துவருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு வெங்கிடம்மாள் தனது ஆடுகளைப் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். திடீரென அதிகாலையில் ஆடுகள் பலத்த சத்தம் போடுவதை கேட்ட அவர் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து பார்த்த பொழுது பட்டிக்குள் இருந்த ஆடுகளை மூன்று வெறிநாய்கள் கடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி அக்கம் பக்கத்தினரின் உதவியோடு நாய்களை விரட்டினார்.



தொடர்ந்து, பட்டிக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 15 ஆடுகள் பலியாகியதும் மேலும் 5 ஆடுகள் காயமடைந்திருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், கணவரை இழந்த தனக்கு கால் நடைகள் தான் வாழ்வாதாரமாக இருந்தது என்றும், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் உயிர்ழந்ததால் தமிழக அரசு தனக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...