திருப்பூரில் பெரியவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பல்லடம் குற்றவியல் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் பெரியவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பல்லடம் குற்றவியல் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி கவுண்டம்பாளையம் புதூரில் முத்துச்சாமிகவுண்டர் என்ற பெரியவரை கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீஸார், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி, முருகன் ஆகிய இருவரைக் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், பாரதி, முருகன் ஆகியோரை இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து பல்லடம் குற்றவியல் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.