கோவை வேளாண்மைத் துறையில் ஒப்பந்த அடிப்படியில் ஊழியர்களைத் தேர்வு செய்து வழங்க பணி நியமன முகமைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை: கோவை வேளாண்மைத் துறையில் ஒப்பந்த அடிப்படியில் ஊழியர்களைத் தேர்வு செய்து வழங்க பணி நியமன முகமைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :-
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பணியினை இணையதளம் மூலம் பதிவு செய்யத் தகுதி வாய்ந்த கணினி புள்ளிவிவரப் பதிவாளர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களை பணி நியமன முகமை (JOB CONSULTANCY) மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணியை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்த பணி நியமன முகமைகள் நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் அனுபவங்களைத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பலாம். வரும் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் விவரங்கள் வந்தடைய வேண்டும். தேர்வாகும் பணிநியமன முகமை ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாக தேர்வு செய்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.