கோவில்பாளையம் பகுதியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் புதிய கிளையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.
கோவை: கோவில்பாளையம் பகுதியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் புதிய கிளையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.
கோவையில் பிரபல மருத்துவமனையான கே.எம்.சி.எச் தனது புதிய கிளையை சத்தி சாலையில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் நிறுவியுள்ளது. அம்மருத்துவமனையானது 100 படுக்கை வசதிகள், 24 மணி நேர விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், பொதுநல மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய நல மருத்துவம், மூளை மற்றும் நரம்பியல் மருத்துவம், மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய மருத்துவ பிரிவுகளை கொண்டுள்ளது.
புதிய மருத்துவமனையை இன்று காலை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். நல்ல பழனிசாமி, டாக்டர். தவமணி பழனிசாமி, எம்.எல்.ஏ-க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், அம்மன் கே.அர்ஜுணன், ஏ.சண்முகம் மற்றும் ஆர்.கனகராஜ் ஆகியோர் பங்கேறனர்.