சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் உள்ள முக்கிய குளங்களுக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
கோவை: சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் உள்ள முக்கிய குளங்களுக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
சதுப்பு நில தினத்தையொட்டி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையானது (இ.எப்.ஐ.,), பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குளச்சவாரியை அறிமுகப்படுத்தியது. அதன்படி, கோவையில் உள்ள முக்கிய ஏரிகளில் பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில், முத்தன்னன் குளத்தில் தொடங்கிய இந்த சவாரி, செல்வம்பதி குளம், நரசம்பதி குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வசிந்தாமணி குளத்தில் முடிவடைந்தது. இந்த சவாரியின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒன்றிப் போகும், புவியியல், நீர் இயல் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
சமூக வலைதளமான பேஸ்புக்கில் இ.எப்.ஐ., என்ற பக்கத்தில் விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சுமார் 3 மணி நேரம் கொண்ட இந்த சவாரியானது இலவசமாக செய்து தரப்படுகிறது.