கோவையில் உள்ள பாப்பீஸ் ஓட்டலில் கேரள பாரம்பரியத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகள் இடம் பெறும், உணவுத் திருவிழா இன்று தொடங்கியது.
கோவை : கோவையில் உள்ள பாப்பீஸ் ஓட்டலில் கேரள பாரம்பரியத்தில் தயாரிக்கப்பட்ட உணவுகள் இடம் பெறும், உணவுத் திருவிழா இன்று தொடங்கியது.

கேரளாவின் முக்கிய திருவிழாவான விஷுவையொட்டி, இந்த உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவுத் திருவிழாவில் 67 வகையான சைவ மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட உள்ளன. உடனடியாக தயாரித்து பரிமாறும் 5 உணவு கவுண்டர்களும் உள்ளன.
உலக மற்றும் தேசிய அளவில் புகழ்வாய்ந்த தலைமை சமையல் கலைஞர் ராஜாதான் இவ்விழாவில் சிறப்பாளராக பங்கேற்கிறார். இவரும், இவரின் குழுவினரும் கேரள மாநிலத்தின் தலைசிறந்த உணவுகளைத் தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளனர். இவர், தென்னிந்திய உணவுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவுத் திருவிழாவில் பரிமாறப்பட உள்ள சில உணவுகள் : கோழி, மீன், செம்மீன் ஊறுகாய் இஞ்சிபுளி, மலபார் நண்டு சாரு, பச்சை மாங்கா மிலகு பொடி இட்டது, மத்தி மீன் பிரை, வழுதலங்கா அரைச்ச கறி, மதுரம் கறி, தலச்சேரி கோழி பிரியாணி சக்க பிரதமன், இதைத் தவிர, அப்பம், மலபாரி பரோட்டா, மீன் பொல்லிச்சது பதிதிரி, பழம்பொரி ஆகியவை லைவ் கவுண்டர்களில் உடனடியாக தயாரித்து வழங்கப்படும்.
இந்த உணவுத் திருவிழா நடைபெறும் திறந்தவெளியில் நீர்நிலைகளில் கேரள மாடல் படகுகள் செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த அலங்காரம் திருவிழாவிற்கு வருவோரைப் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழா இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை தினமும் இரவு 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை நடக்கிறது. விழாவில் பங்கேற்க ஒருநபருக்கு ரூ. 799 கட்டணமாகப் பெறப்படும். மேலும், 8 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ரூ. 500 கட்டணம் வசூலிக்கப்படும்.
இன்று தொடங்கிய இந்த உணவு திருவிழாவை கோவை வுமன்ஸ் சென்டர் மருத்துவ இயக்குநர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.