ஐ லீக் கால்பந்து போட்டி தொடரில் இக்கட்டான நிலையில் சென்னை அணி : பயிற்சியாளர்

ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டித் தொடரில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக சென்னை கால்பந்து கழக பயிற்சியாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை : ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டித் தொடரில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக சென்னை கால்பந்து கழக பயிற்சியாளர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகளில் கிழக்கு வங்க கிங்பிஷர் அணி, மினர்வா பஞ்சாப் கால்பந்து கழகம், நெரோகா கால்பந்து கழகம், ஷிலாங் லஜோங் கழக அணி, மோகன் பகன், ஆஸ்வால் கால்பந்து கழக அணி, சென்னை நகர கால்பந்து அணி, இந்தியன் ஏரோஸ், கோகுலம் கேரள கால்பந்து கழகம் மற்றும் கோவாவை சேர்ந்த சர்ச்சில் பிரதர்ஸ் அணி என இந்தியாவின் தலைசிறந்த 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும்.

சென்னை கால்பந்து அணி தனது சொந்த மைதானத்தில் இதுவரை வெற்றி பெற முடியாமல் திணறி வருகிறது. 10 புள்ளிகளுடன் உள்ள சென்னை அணி, கோவை வ.ஊ.சி மைதானத்தில் நாளை நடக்கும் போட்டியில் ஆஸ்வால் கால்பந்து கழக அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும்.

இந்த நிலையில், இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் சவுந்தரராஜன் பேட்டியளித்தார்.  அவர் கூறியதாவது, நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி வாய்ப்புகள் அதிகமிருந்தும் வெற்றி பெறாதது துரதிர்ஷ்டம். கடந்த போட்டியில் கோல் அடித்தும், அதை நடுவர் ஆப்சைடு எனக் கூறியதால் 3 புள்ளிகளை இழக்க நேரிட்டது. இது முழுக்க முழுக்க நடுவரின் தீர்ப்பு. 3 புள்ளிகளை இழந்ததால் பின் தங்கி உள்ளோம். நாளைய போட்டியில் வீரர்கள் முழு மூச்சுடன் விளையாடி வெற்றி பெற முயல்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு கூறினார். 

இதைத் தொடர்ந்து, ஆஸ்வால் கால்பந்து கழக அணியின் பயிற்சியாளர் பவுலோ மெனான்சோ கூறும்போது, நாளைய போட்டியில் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இருப்பினும், சென்னை அணியில் சிறப்பாக விளையாடக் கூடிய நான்கு, ஐந்து வீரர்கள் உள்ளனர். எனவே, போட்டி விறுவிறுப்பாக இருக்கும். நாளை மதியம் 3 மணிக்கே போட்டி துவங்க உள்ளதால், அதற்கு தகுந்தாற்போல் வீரர்கள் தயாராகி வருகின்றனர். என்றார். 

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...