நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.
நீலகிரி: நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

மலை மாவட்டமான நீலகிரியில் பசுமையைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான உதகையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், உதகையின் முக்கிய பகுதிகளில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில், பெரும்பாலான கடைகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், நீலகிரி மாவட்டத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையானதாகவும், பசுமையானதாகவும் மாற்றும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள், வணிகர்கள், சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு பிரசுரங்கள் அவ்வப்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, உதகை மார்கெட் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை இன்று (பிப்.,02) மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.