திருப்பூரில் பனியன் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் கருகி வீணாகின.
திருப்பூர்: திருப்பூரில் பனியன் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் கருகி வீணாகின.

காங்கேயம் சாலையில் வசித்து வருபவர் ஜாபர். இவர் கோம்மைத்தோட்டம் செல்லாண்டியம்ன் கோவில் அருகில் பனியன் குடோன் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல குடோன் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர் இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் குடோன் முழுவதும் பரவியது.

இது குறித்து அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்தத் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள் தீயில் கருகி சேதமானதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.