தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

பிப்ரவரி 02

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம்   டர்பனில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங்கை  தேர்வு செய்தார். 

அதன்படி, டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 16 ரன்கள் எடுத்த நிலையில் அம்லா பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து கேப்டன் டு பிளிசிஸ் களம் இறங்கினார். டி காக் 34 ரன்களில் சாஹல் பந்தில் அவுட்  ஆனார். அதன்பின் வந்த மார்கிராம் (9), டுமினி (12), மில்லர் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், டுபிளிசிஸ் சிறப்பாக விளையாடினார். அவருக்கு கிறிஸ் மோரிஸ் (37) துணை நின்றார்.

சிறப்பாக விளையாடிய டுபிளிசிஸ்  101 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்த பின்னர் டுபிளிசிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 112 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 120 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தென்ஆப்பிரிக்கா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. தென்னாப்ரிக்கா அணி கடைசி 5 ஓவரில் 46 ரன்கள் குவித்தது.

அதைத்தொடர்ந்து, 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது ஆட்டத்தை தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 20 ரன்னிலும்,  தவான் 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து, கேப்டன் விராட் கோலியுடன், ரஹானே ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக  விளையாடி ரன் குவித்தனர். 

விராட் கோலி அரைசதம் கடந்தார். தொடர்ந்து எதிர்முனையில் சிறப்பாக விளையாடிய ரகானேவும் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்ரிக்கா பந்துவீச்சாளர்கள் திணறினர். 41-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்த கோலி சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 33-வது சதமாகும்.சிறப்பாக விளையாடிய ரகானே 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். விராட் கோலி - ரகானே ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தது. அதன்பின், ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். விராட் கோலி 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் தோனி  களமிறங்கினார்.

 

இந்திய அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்தது. வெற்றி ரன்களை தோனி  அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்ரிக்கா அணியின் பந்துவீச்சில் மார்னே மார்கல், அண்டிலே பெலுஹ்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 4-ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...