உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் : 4 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு

உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வரைவு வார்டு மறுவரையறை ஆணையத்தலைவர் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக்பெரோஸ்கான் தலைமையில் கோவையில் நடைபெற்றது

கோவை : உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வரைவு வார்டு மறுவரையறை ஆணையத்தலைவர் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக்பெரோஸ்கான் தலைமையில் கோவையில் நடைபெற்றது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (பிப்.,01) உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக வெளியிடப்பட்ட வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் மீதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் ஆட்சேபனை, கருத்துக்களை நேரடியாகக் கேட்பதற்கான மண்டல அளவிலான கூட்டம் மறுவரையறை ஆணையத் தலைவரும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் எம். மாலிக்பெரோஸ்கான் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு மாநில தேர்தல் ஆணையர் எம். மாலிக்பெரோஸ்கான் பேசுகையில், வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிலும், மாவட்ட அளவிலும் வெளியிடப்பட்டு அக்கருத்துருக்களின் மீது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களின் தொடர்பான மனுக்கள் கடந்த மாதம் 12-ம் தேதி வரை பெறப்பட்டன. அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை நேரடியாகத் தெரிவித்ததன் அடிப்படையில், அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் பெறப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைப் பொருத்தவரை கடந்த மாதம் 12-ம் தேதி வரை பெறப்பட கருத்துக்கள் மனுக்களில் 671 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மறுவரையறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் 1,717 பரிசீலனையில் செய்யப்பட உள்ளன. மேற்படி மனுக்களை பரீசிலனை செய்து ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மறுவரையறை ஆணையத்திற்கு உடனடியாக அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறினார். 

இக்கூட்டத்தில் மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர்களான நகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் கா.பாஸ்கரன், பேரூராட்சிகள் இயக்குநர் சு.பழனிசாமி, மறுவரையறை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் த.சு.ராஜசேகர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மறுவரையறை அலுவலர் த.ந.ஹரிஹரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மறுவரையறை அலுவலர் ஜே.இன்னோசென்ட் திவ்யா, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மறுவரையறை அலுவலர் கே.எஸ்.பழனிசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மறுவரையறை அலுவலர் எஸ்.பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...