மும்மொழி கல்வித்திட்டம் வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழக முதலமைச்சருக்குத் தபால் அனுப்பும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
கோவை: மும்மொழி கல்வித்திட்டம் வேண்டி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழக முதலமைச்சருக்குத் தபால் அனுப்பும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
தமிழக அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் வாயிலாக மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மற்ற மாநிலங்களைப் போல இந்தி மொழியையும் சேர்த்து மும்மொழி கல்வித்திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் சார்பில் தமிழக முதல் அமைச்சருக்குத் தபால் அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக, அக்கட்சியினர் முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும் மும்மொழி கல்வித்திடம் நடைமுறையில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் அவரவர் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் கல்வி கற்கின்றனர். இந்தி மொழி வெறுப்புணர்வு கொண்டவர்களின் அரசியல் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகமாக இருப்பதால் இங்கு மட்டும் இரு மொழி கொள்கை மட்டுமே நடைமுறையில் உள்ளது.
இந்தக் கொள்கை காரணமாக நவோதய பள்ளிகள், மத்திய அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் பள்ளிகளுக்கான நிதிகள் தமிழகத்திற்கு வருவதில்லை. இதனால், தமிழக மாணவர்கள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனர். எனவே, இருமொழிக் கல்விக் கொள்கையை கைவிட்டு மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
மேலும், தமிழகத்தில் ஆரம்ப கல்வியை தமிழ்க் கல்வியாக மட்டுமே அமல்படுத்த வேண்டும். உயர்கல்வியைத் தமிழில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.