‘விறு விறு’ விற்பனை: கோவையில் அமோகமாக விற்பனையாகும் கரும்புசாறு

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் கரும்பு சாற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் கரும்பு சாறு விற்பனை சுடுபிடித்துள்ளது.

கோவை: கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் கரும்பு சாற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் கரும்பு சாறு விற்பனை சுடுபிடித்துள்ளது.

மார்கழி கழிந்து தை பிறந்த போதிலும் குளிர் நம் கோவையை விடுவதாயில்லை. அதிகாலையிலும், இரவு நேரங்களிலும் கடும் குளிரும் பனி மூட்டமும் நிலவி வருகிறது. அதே நேரத்தில், பகலில் பங்குனி மாதத்திற்கு நிகராக ‘பல்லைக்காட்டி’ சிரிக்கிறது வெயில்.,

இதனிடையே இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் அதிக அளவில் கரும்பு சாறுகளை பருகி வருகின்றனர். இளநீர் விலையை ஒப்பீடும் போது கரும்பு சாறு விலை குறைவாக உள்ளதால் விற்பனை அதிகமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

"நாள் ஒன்றிற்கு சராசரியாக தினமும் 100 டம்பளர் விற்பனை நடைபெற்ற நிலையில் தற்போது 200 டம்பளர் வரை விற்பனை ஆகிறது. 250 மில்லி கிராம் கரும்பு சாறு ரூபாய் 20 மட்டுமே ஆனால் இளநீர் , பழச்சாறு போன்றவை ரூபாய் 30 முதல் 100 வரை விற்கப்படுகிறது." என்றார் கரும்புசாறு வியாபாரி செல்வராஜ்.

ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு குளிர்பானங்கள் மீதான மோகம் குறைந்து இது போன்ற இயற்கை பானங்கள் மீதான மோகம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐ.டி ஊழியர் பெருமாள்சாமி கூறுகையில், "வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கரும்பு சாறு தினமும் அருந்துகிறேன். இதற்கு முன்னர் குளிர்பானங்கள் வாங்கி வந்தேன் ஆனால் ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு இயற்கை பானங்கள் தான் அதிக அளவில் உபயோகிக்கிறேன்." என்றார்.

கரும்புசாறு உடலுக்கு மிகவும் நல்லது அதில் நம் உடலுக்கு தேவையான விட்டமின்கள் அதிமாக உள்ளது. வெயில் காலங்களில் கரும்புச்சாறு அருந்தும் போது உடல் சோர்வடையாது. ஆனால், நீரழிவு நோய் உள்ளவர்கள் இதனை மிகவும் குறைவாக தான் அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...