கோவை ஏ.டி.எம் கொள்ளையில் வழக்கில் முக்கிய நபர் கைது: கொள்ளையன் குறித்து அதிரவைக்கும் தகவல்கள்

கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் ஹரியானாவை சேர்ந்த நபரை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் ஹரியானாவை சேர்ந்த நபரை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் ஏ.டி.எம் மையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி புகுந்த மர்ம நபர்கள் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். 

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில் அருகில் இருக்கும் ஏ.டி.எம். மையங்களிலும் புகுந்து கைவரிசை காட்டிய அந்த கும்பல் மொத்தமாக ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது. 

இந்த கொள்ளையர்களை பிடிக்க மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் தலைமையில் 7 தனிப்படைகளை அமைத்து மாநகர காவல் ஆணையர் K.பெரியய்யா உத்தரவிட்டார். 

தனிப்படையினரின் விசாரணையின் போது கொள்ளையர்கள் நாமக்கல் மற்றும் சேலம் வழியாக பெங்களூர் தப்பிச்செல்ல இருப்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து அந்த மாவட்டங்களின் போலீசாருடன் இணைந்து செயல்பட்ட கோவை மாநகர போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட ஜீல்பிகர், முஸ்டாக், மோசம்கான், சுபேர், அமித்குமார், முபாரக், அமீன் மற்றும் சுபேர் ஆகியோரை கைது செய்தனர். 

இந்த கொள்ளை கும்ன்பலின் தலைவன், போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவாகினார். 

தொடர்ந்து, தப்பியோடிய கொள்ளையனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது ஹரியான மாநிலத்தை சேர்ந்த சித்திக் அகம்மது என்பவரது மகன் இசுலாமுதீன் (42) என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதிக்கு இசுலாமுதீன் அவரது காதலியை சந்திக்க வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், நேற்று இரவு ராஜஸ்தான் மாநில போலீசாரின் உதவியுடன் இசுலாமுதீனை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்படிருப்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த கொள்ளை கும்பல் மீது டெல்லி, ஹரியான, உத்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல் போன்ற 34-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

கொள்ளை வழக்கு ஒன்றிற்காக ஹரியானா மாநில மேவாத் மாவட்ட போலீசாரால் தனது கும்பலுடன் கடந்த கடந்த 2016-ம் இசுலாமுதீன் கைது செய்யப்படுள்ளார்.

தற்போது கோவை மாநகர போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...