கோவை செட்டிபாளையம் பகுதியில் இன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு துவங்கி நடைபெற்ற வருகிறது.
கோவை, ஜனவரி 28
கோவை செட்டிபாளையம் பகுதியில் இன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு துவங்கி நடைபெற்ற வருகிறது.

இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. மேலும், சுமார் ஆயிரம் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, ஜல்லிக்கட்டு துவங்கும் முன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி "தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டை கொண்டாடவும், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணிக்காப்போம் என்றும், காளைகளுக்கு எவ்வித இடையூறும் செய்யமாட்டோம் என்றும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த ஜல்லிக்கட்டை விளையாடுவோம்" என்று உறுதிமொழியினை வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர்.

இதனிடையே, கோவையில் ஜல்லிக்கட்டை காண மக்கள் குவிந்து வருகின்றனர். கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால், நிற்பதற்கு கூட இடமில்லாத நிலையில் ஆர்வத்துடனேயே மக்கள் அதனை கண்டு ரசித்து வருகின்றனர்.