கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் மனநலம் பாதிக்கப்பட்டவர் பலத்தகாயம் அடைந்தார்.
கோவை, ஜனவரி 27
கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் மனநலம் பாதிக்கப்பட்டவர் பலத்தகாயம் அடைந்தார்.
மருதமலை அரசு சட்டக்கல்லூரி அருகே உள்ள பகுதிகள் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளன. எனவே, காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையில், சேலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சவுந்தர் ராஜா என்பவர் அங்குள்ள சாலையோரத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த காட்டு யானை ஒன்று, அவரை தாக்கி விட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள்ளே சென்றது.
இதையறிந்த, அந்த வழியாக செல்பவர்கள், படுகாயமடைந்த சவுந்தர் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.