குடியரசுத் தின விழாவில் “டெங்குவை எதிர்த்து போராடுவோம்” திட்டத்தை துவக்கிய மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 69-வது குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, “டெங்குவை எதிர்த்து போராடுவோம்” என்னும் புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்.

கோவை, ஜனவரி 27

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 69-வது குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, “டெங்குவை எதிர்த்து போராடுவோம்” என்னும் புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 69-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையர் காந்தியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய 34 மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்க பரிசுத்தொகையாக தலா ரூ.2,000 வழங்கினார்.

அதேப்போல் 2016-17 ம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் அதிகபட்ச இலக்கினை எட்டிய 20 வரிவசூலர்களுக்கு ஆணையர் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய தற்காலிக ஒப்பந்த சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப் பரிசுத்தொகையாக தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. மேலும், மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி தந்த 5 மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், “டெங்குவை எதிர்த்து போராடுவோம்” என்ற ஒரு புதிய திட்டத்தை ஆணையர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கோவை மாநகராட்சி, தனியார் நிறுவனங்கள, பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், தனியார் ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களுக்கு தேவையான சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். இத்திட்டத்தின் மூலம் தங்களுடை வளாகங்களை தூய்மையான சுகாதாரமான முறையில் பராமரிக்கும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், தனியார் ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களுக்கு மாநகராட்சி சார்பாக விரைவில் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.



மேலும், இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் (மேற்கு) மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் களரி, சிலம்பாட்டம் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இவ்விழாவில், மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி, உதவி ஆணையர் நிர்வாகம் செந்தில்குமார் ரத்தினம், உதவி ஆணையர் வருவாய் கே.ரவிக்குமார், நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து பிரிவு அலுவலர்கள், மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த தேசிய மாணவ படையினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...