வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தினவிழா அனுசரிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 69-வது குடியரசு தினவிழா இன்று (ஜன. 26) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், துணைவேந்தர் கு. இராமசாமி தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா உரையாற்றினார். வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் எஸ்.மகிமைராஜா வரவேற்புரையாற்றினார்.

கோவை, ஜனவரி 26

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 69-வது குடியரசு தினவிழா இன்று (ஜன. 26) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், துணைவேந்தர் கு. இராமசாமி தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா உரையாற்றினார். வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் எஸ்.மகிமைராஜா வரவேற்புரையாற்றினார்.

துணைவேந்தர் உரையாற்றுகையில், நாட்டை ஒன்றிணைத்து இந்தியாவை உலகின் மிகப்பெரிய குடியரசாக்கிய இந்தியத் தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். இந்தியாவில், நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களால் நாம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்று அனைவருக்கும் உணவு அளிக்கும் நிலையடைந்தோம். உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பையும், தற்போதுள்ள தேசத்தின் எதிர்பார்ப்பையும் சுட்டிக்காட்டினார்.



இதனைத்தொடர்ந்த, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் புதிய இணையதள முகவரியை துணை வேந்தர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணவர்களோடு தேசிய மாணவர் படை அதிகாரிகள் செல்லமுத்து, மற்றும் மனோன்மணி, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், அலுவலர்கள் பல்கலைக்கழகத்திற்குள் செயல்படும் ஆரம்பப் பள்ளி சிறார்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...