கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கோவையில் வரும் 31-ம் தேதி 3-வது கட்ட விசாரணையைத் தொடங்க இருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை, ஜனவரி 25

கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் இறுதி நாள் கலவரத்தில் முடிந்தது. இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் கலவரம் தொடர்பாக, பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தவர்களிடம் கோவை, சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
நீதியரசர் எஸ். ராஜேஸ்வரனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால், ஜல்லிக்கட்டு போராட்டக் கலவரம் தொடர்பான விசாரணை சிறிது நாட்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் 31-ம்தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரையில் 3-ம் கட்ட விசாரணையை நடத்த இருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணை கோவை அரசு விருந்தினர் மாளிகையில் நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.