ஜெயலலிதா மரண விவகாரம்: 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விசாரணை ஆணையம் சம்மன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஜனவரி 25

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு விளக்கங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிக் கொண்டிருக்கும் போது, அவரிடம் கைரேகை வாங்கிய அரசு மருத்துவர் பாலாஜி இன்று மீண்டும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார். 

அப்போது, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன? என்பது குறித்த அனைத்து விவரத்தையும் எழுத்துப்பூர்வமாக அரசு மருத்துவர் பாலாஜி இன்று தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சில மருத்துவ குறிப்புகள் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி கேட்டுக் கொண்டதின் பேரில் நான் கொடுத்தேன். அதற்காக சில கேள்விகளை கேட்டதற்கு நான் பதில் கூறினேன். எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தேன். தேவைப்பட்டால் அடுத்த மாதம் மீண்டும் ஆஜராவேன். தற்போது எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துள்ளேன். அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்துள்ள விவரங்கள் குறித்து அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆஜராகிய போது, சசிகலா மீது புகார் கூறியவர்களின் பட்டியலை அளிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பினர் தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, சசிகலா விளக்கம் அளிப்பது தொடர்பாக 15 நாள் அவகாசம் கேட்கப்பட்டது. இதுகுறித்து ஆணையம் 30-ந்தேதி தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என தெரிகிறது. 

இந்நிலையில், ஜெயலலிதாவின் செயலாளர்களாக பணியாற்றிய வெங்கட்ரமணன், விஜயகுமார், ராமலிங்கம், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.வெங்கட்ரமணன் வருகிற 30-ந்தேதியும், விஜயகுமார் 31-ந்தேதியும், ராமலிங்கம் பிப்ரவரி 1-ந்தேதி, ஜெயஸ்ரீ முரளிதரன் 2-ந்தேதியும் ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. இவர்களில், வெங்கட ரமணன் ஓய்வு பெற்று விட்டார். மற்ற 3 பேரும் தற்போது அரசு பணியில் உள்ளனர். இதேபோல, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன் பிப்ரவரி 8-ந்தேதி ஆஜராகவும், சசிகலாவின் செயலாளர் கார்த்திகேயன் பிப்ரவரி 5-ந்தேதி ஆஜராகவும் சம்மன் அனுப்பி உள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...