தனது அரசியல் பயணத்திற்கு 'நாளை நமதே' எனப் பெயர் சூட்டிய கமல்

நடிகர் கமலஹாசன் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு 'நாளை நமதே' எனப் பெயரிட்டுள்ளார்.

ஜனவரி 25

நடிகர் கமலஹாசன் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு 'நாளை நமதே' எனப் பெயரிட்டுள்ளார்.

நடிகர் கமல் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த நிலையில், வரும் பிப்ரவரி 21 ஆம் தேதியன்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பிரவேசத்தை துவங்க உள்ளதாகவும், அன்றே கட்சியின் பெயரையும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடனும் அவர் அண்மையில் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், நடிகர் கமலஹாசன் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு 'நாளை நமதே' என பெயர் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய பிரதேசமாக மாற்றுவதே 'நாளை நமதே' பயணத்தின் நோக்கம். அரசியல் பயணத்தின் முதல்கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம். கிராமங்களைத் தத்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் ஹார்வர்டு பல்கலை.,யில் கிராமங்களை தத்தெடுப்பது குறித்து பேச உள்ளேன். கிராமங்களுக்கு உதவும் எண்ணம் அரசியல்வாதிகளிடம் குறைந்து விட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...